திருப்பரங்குன்றம்- திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு பாரிவேந்தர் பேட்டி
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நெல்லையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
நெல்லை,
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நெல்லையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கருத்து கேட்பு கூட்டம்
எங்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் கடந்த 8-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மண்டலமாக ஒன்றிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியை பொறுத்த வரையில் நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 6 மண்டலமாக ஒன்றிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்து வருகிறது. எங்கள் கட்சி தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்று, 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை எங்கள் கட்சி 2 பொதுத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தேர்தல், 2 இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு
தற்போது நாங்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், மகளிர் அணி தலைவி அமுதா, மாநில நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜேந்திரன், வரதராஜன், இருதயராஜ், ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story