போலி நம்பர் பிளேட் காரில் வந்த கும்பல் தப்பி ஓட்டம் ஆயுதங்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. காரில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், வாகன சோதனை மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தியபோது அதில் இருந்து 4 மர்ம நபர்கள் காரை நிறுத்திவிட்டு இருட்டு பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் போலீசார் சந்தேகமடைந்து காரை சோதனையிட்டபோது அதில் கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. காரின் நம்பர் பிளேட்டை பார்த்தபோது அது போலியான திருச்சி பகுதி நம்பர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். ஏனெனில் காரின் என்ஜின் உள்ளிட்ட பகுதிகளின் பதிவு எண்களை வைத்து விசாரித்தபோது அது சென்னை பகுதியை சேர்ந்த கார் என்பது தெரிந்தது.
இதனை தொடர்ந்து காரில் வந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்று போலி நம்பர் பிளேட்டு பொருத்தி கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு கும்பல் வந்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- மாவட்டத்தில் வீடு புகுந்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களை தொடர்ந்து வாகன சோதனை நடத்தவும், ரோந்து சுற்றி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுஉள்ளதால் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி காரில் வெளியூரில் இருந்து வரும் மர்ம கும்பல் பூட்டியுள்ள வீடுகளை பகல் நேரங்களில் கண்காணித்து இரவில் வந்து கைவரிசையை காட்டி செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இந்த கும்பல் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. இதன்மூலம் பெரிய அளவில் நடைபெற இருந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய நபர்கள் குறித்து வாகனத்தின் குறியீடு எண்ணை வைத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரில் வந்து நோட்டமிடுபவர்கள் புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைவதால் அந்த பகுதியில் சோதனை அதிகரிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story