பழையாறு கால்வாய்களை சீரமைக்க ரூ.350 கோடியில் திட்டம் அதிகாரி தகவல்
பழையாறு கால்வாய்களை ரூ.350 கோடியில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வேத அருள்சேகர் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் ஜார்ஜ், பத்மதாஸ், செல்லப்பா, தங்கப்பன், தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசினர். அப்போது தெரிவித்த கோரிக்கைகள், குறைகளின் விவரம் வருமாறு:-
குமரி மாவட்டத்தில் ஒகி புயலில் இறந்ததாக அரசால் கணக்கு எடுக்கப்பட்ட மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தற்போது நடைபெறவில்லை. எனவே தனி அலுவலரை நியமிக்க வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும். ஒகி புயலின் போது சேதமடைந்த குளம், கால்வாய்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. நாகர்கோவில் நகராட்சி குடிநீர் தேவைக்கு புத்தன் அணை குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அதற்கான குழாய் பதிக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிகிறது. இந்த திட்டம் நிறைவேறினால் 64 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள், கால்வாய்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுகிறது. அங்கு விலைப்பட்டியல் எதுவும் வைக்கப்படுவது இல்லை. எனவே உரக்கடைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், ஒகி புயலில் இறந்த மீனவரல்லாதவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்டம் தொடர்பாக அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்றனர்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள் சேகர் கூறுகையில், பொதுப்பணித்துறை மூலம் கோதையாறு பாசனத்துக்குட்பட்ட பழையாறு கால்வாய்களை சீரமைக்க ரூ.350 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Tags :
Next Story