லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 5½ கிலோ தங்கம், 75 கிலோ வெள்ளி காணிக்கை


லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 5½ கிலோ தங்கம், 75 கிலோ வெள்ளி காணிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2018 5:15 AM IST (Updated: 28 Sept 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 5½ கிலோ தங்கம் மற்றும் 75 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்து உள்ளது.

மும்பை, 

லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 5½ கிலோ தங்கம் மற்றும் 75 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்து உள்ளது.

லால்பாக் விநாயகர்

மும்பையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல மண்டல்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா மண்டலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக லால்பாக் ராஜா விநாயகருக்கு செலுத்தினார்கள். மேலும் மண்டலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களிலும் காணிக்கை பணம் குவிந்தது.

பக்தர் ஒருவர் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை ஒன்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தார்.

தங்கம், வெள்ளி காணிக்கை

இந்த சிலையுடன் சேர்த்து மண்டலுக்கு 5½ கிலோ தங்கம் கிடைத்து உள்ளது. மேலும் விநாயகர் சிலை, மோதகம் என 75 கிலோ வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்து இருக்கின்றன. இதுதவிர பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணமும் எண்ணப்பட்டு வருகிறது.

மண்டலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஏலம் விடும் பணி நேற்று தொடங்கியது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஏழை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என மண்டல் நிர்வாகி சுதிர் சால்வி தெரிவித்தார்.

Next Story