உசிலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
உசிலம்பட்டியில் கல்லு£ரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
சீர்மரபினர் தங்களுக்கு பழங்குடியினர் என சான்றிதழ் வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சீர்மரபினருக்கு ஆதரவாக உசிலம்பட்டி தேவர் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் வாலாந்து£ர் பாண்டியன், முதல்வர் ஜோதிராஜன், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவ– மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் உங்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
அதன் பின்னர் மாணவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ. பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.