அருப்புக்கோட்டையில் லாரிகளை திருடி பழைய இரும்பு கடையில் விற்பனை; 4 பேர் கைது
அருப்புக்கோட்டையில் லாரிகளை திருடி மர்ம மனிதர்கள் தூத்துக்குடியில் பழைய இரும்புக்கடையில் விற்றுள்ளனர். இதுதொடர்பாக வியாபாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அடுத்தடுத்து 2 லாரிகள் மாயமானதை தொடர்ந்து அதனை திருடிச்சென்றவர்களை பிடிக்க தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் இரு லாரிகளும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் தூத்துக்குடி போல்பேட்டா பகுதியை சேர்ந்த பழைய இரும்புக்கடை வியாபாரியான அபூபக்கர் (வயது64), அவரது கடையில் வேலைசெய்யும் முருகேசன்(55), ஜே.சி.பி. எந்திர டிரைவரான ஷேக்முகமது(38), ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தபெயிண்டரான சோலைசாமி(38) ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.
அருப்புக்கோட்டை நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது62). இவர் தனது லாரியை காந்திநகரிலுள்ள ஒரு ஒர்க்ஷாப் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 11–ந் தேதி அந்த லாரி மாயமாகி விட்டது.
இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதேபோல பந்தல்குடி சூரநாயக்கன்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பதவர் தனது லாரியை அங்குள்ள களத்து மேடு பகுதியில் நிறுத்தியிருந்தார். இந்த லாரி கடந்த 15–ந் தேதி இரவு மாயமானது. இதுகுறித்து பந்தல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து 2 லாரிகள் மாயமானதை தொடர்ந்து அதனை திருடிச்சென்றவர்களை பிடிக்க தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் இரு லாரிகளும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் தூத்துக்குடி போல்பேட்டா பகுதியை சேர்ந்த பழைய இரும்புக்கடை வியாபாரியான அபூபக்கர் (வயது64), அவரது கடையில் வேலைசெய்யும் முருகேசன்(55), ஜே.சி.பி. எந்திர டிரைவரான ஷேக்முகமது(38), ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தபெயிண்டரான சோலைசாமி(38) ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.
அந்த 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் அருப்புக்கோட்டையில் இருந்து லாரிகளை திருடி வந்த மர்ம நபர்கள் அதனை பழைய இரும்புக்கடை வியாபாரியான அபூபக்கரிடம் விற்று இருப்பது தெரியவந்தது. அவர் அதனை பிரித்து விற்க முயற்சி செய்துள்ளார். மேலும் ஜே.சி.பி. எந்திர டிரைவர் ஷேக்முகமது துணையோடு பெயிண்டரான சோலை சாமி கடைக்கு கொண்டு சென்று அங்கு ஒரு லாரிக்கு புதிதாக பெயிண்ட் அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
திருடர்கள் திருட்டு லாரியை வாங்கிய வியாபாரி அபூபக்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், லாரிகளை திருடி வந்து விற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அபூபக்கர் இதேபோல பல திருடர்களிடம் திருட்டு லாரிகளை வாங்கி தனித்தனியாக பிரித்து விற்றுள்ளார்களா என்றும் விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story