குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
குடிமைப்பணி போட்டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சியில் சேர மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக சிறப்பு பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fis-h-e-r-ies.tn.gov.in இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை மற்றும் இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அரியலூர் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், அறை எண் 234, 2-வது மேல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரியலூர்- 621704 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற(அக்டோபர்) 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story