ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மருந்து கடைகள் அடைப்பு
ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
பெரம்பலூர்,
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மருந்து கடைகள் முழுநேர அடைப்பு போராட்டம் நடத்துவது என்று அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளன முடிவின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளின் உரிமையாளர்கள், கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கடந்த 21-ந்தேதி முதல் நேற்று வரை தங்களுடைய சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நோயாளிகளுக்கு மருந்து வாங்க முடியாமல், அவர்களுடைய உறவினர்கள் தவித்தனர். கடையடைப்பு பற்றி அறிந்த சிலர் நேற்று முன்தினமே தேவையான மருந்துகளை வாங்கி இருப்பு வைத்து கொண்டனர். இருப்பினும் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவமனைகளுக்குள் உள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மருந்து கடைகளின் உரிமையாளர்கள், கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் ராமலிங்கம், பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சவுகத் அலி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடந்தது. மருத்துவமனைகளுக்குள் உள்ள சில மருந்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டத்தில் மருந்து கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மருந்துகள் உயிர்காக்கும் பொருளாகும், அதை காலணி போன்ற பொருட்கள் வாங்குவது போல் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்தையன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். அழுகு, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். முருகன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story