‘கருவறை முதல் கல்லறை வரை சட்டம் தேவைப்படுகிறது’ மாவட்ட நீதிபதி பேச்சு


‘கருவறை முதல் கல்லறை வரை சட்டம் தேவைப்படுகிறது’ மாவட்ட நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

‘கருவறை முதல் கல்லறை வரை சட்டம் தேவைப்படுகிறது’ என்று மாவட்ட நீதிபதி பேசினார்.

மேலூர்,

மேலூர் அருகே விநாயகபுரத்தில் உள்ள வைகை என்ஜினீயரிங் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ் கலந்துகொண்டு மாணவ–மாணவிகளிடையே உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:–

இருசக்கர வாகனம் ஓட்டும்போது மாணவ–மாணவிகள் ஹெல்மேட் அணிந்து செல்ல வேண்டும். குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால், அதை தடுக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் நமக்கு துணை வருகிறது. அதேபோல் கருவறை முதல் கல்லறை வரை சட்டம் தேவைப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்துவதோடு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, சமுதாயத்துக்கு உதவ மாணவ–மாணவிகள் முன்வர வேண்டும்.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். செல்போன்களை அறிவை வளர்க்கவும், படிப்புக்காகவும், நல்ல நோக்கத்துடன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுகி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story