திருவாடானை அரசு மருத்துவமனையில் செயல்படாத சூரியஒளி மின் சாதனம்
திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் செயல்படாமல் உள்ள சூரியஒளி மின் சாதனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தொண்டி,
திருவாடானையில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனைக்கு 300-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளும், தாலுகா மருத்துவமனைக்கு உரிய வசதிகளும் இல்லை. ஆபரேஷன் தியேட்டர் முதல் அனைத்து மருத்துவ சேவைகளும் முழுமையாக இப்பகுதி மக்களுக்கு இன்னும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
இங்கு மின்வசதி இல்லாத குறையை போக்க ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை இயக்க பணியாளர் இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக அந்த ஜெனரேட்டர் செயல்படாமல் உள்ளது.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சூரிய மின் வசதி பல லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது செயல்படவில்லை.
இதனால் பல நாட்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது இந்த மருத்துவமனை இருளில் மூழ்கிவிடுகிறது.
இங்கு சூரிய மின்வசதி இருந்தும் செயல்படாததால் மாதந்தோறும் பல ஆயிரம் மின் கட்டணமாக செலுத்தும் நிலை இருந்து வருகிறது. இங்குள்ள சூரிய ஒளி மின் வசதியை மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடு இல்லாமல் உள்ள சூரிய ஒளி மின் சாதனத்தை செயல்பட வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாடானை தாலுகா செயலாளர் குருசாமி மனு அனுப்பி உள்ளார்.

Related Tags :
Next Story