ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து ஓசூரில் 300 மருந்து கடைகள் அடைப்பு


ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து ஓசூரில் 300 மருந்து கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 29 Sept 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து ஓசூரில் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

ஓசூர்,

ஆன்-லைன் மருந்து வணிகத்திற்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய அளவில் நேற்று ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், எம்.ஜி.ரோடு, ஏரித்தெரு, தாலுகா அலுவலக சாலை, பாகலூர் ரோடு, பழைய பெங்களூரு சாலை மற்றும் குடியிருப்பு காலனிகள், புறநகர் பகுதிகளிலும், சூளகிரி, பேரிகை, பாகலூர் ஆகிய இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூரில் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சூளகிரி, பாகலூர், பேரிகை போன்ற இடங்களிலும் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Next Story