மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க ரகசிய கண்காணிப்பு குழு - சட்ட விழிப்புணர்வு முகாமில் கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க ரகசிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை இணைந்து வேலூர் பார்வையற்றோர் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியுமான தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கியல் தொழில்நுட்பாளர் ஜோதிலிங்கம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள் வாழ்த்தி பேசினார்.
வக்கீல் கமலாதேவி, சட்ட துணை தன்னார்வலர் வெங்கடேசன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள், சட்டங்கள் குறித்து பேசினர்.
முகாமில் முதன்மை சார்பு நீதிபதி தாமோதரன் பேசியதாவது:-
வசதி இல்லாதவர்களுக்கு வழக்கில் வாதாடுவதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இலவசமாக வக்கீல் ஏற்பாடு செய்தல், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரசம் செய்து வைத்தல், மக்களுக்கு சட்டம் குறித்து அறிவு ஏற்படுத்துதல், குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், சலுகைகள், திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்படும். சமூகம் மாறி வருகிறது. உங்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் தெரிவித்த குறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க ரகசிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அரசு பஸ்களில் செல்லும் போது சில கண்டக்டர்கள் அவதூறாக பேசுகின்றனர். மேலும் பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக இருக்கைகள் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு செல்ல ஏதுவாக இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பூட்டிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் கூறினர்.
இந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

Related Tags :
Next Story