ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:53 AM IST (Updated: 29 Sept 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து வணிகர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அப்போது திரளான மருந்து வணிகர்கள் கலந்து கொண்டு ஆன்-லைன் மூலம் மருந்து விற்பதை தடை செய்யவேண்டும், தரமற்ற போலி மருந்துகளை ஆன்-லைனில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல திருவள்ளூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story