காசநோய் குணமாகும் முன் சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் நர்சு பணி இடைநீக்கம்: ஊழியர்கள் 3 பேர் இடமாற்றம்


காசநோய் குணமாகும் முன் சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் நர்சு பணி இடைநீக்கம்: ஊழியர்கள் 3 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 29 Sept 2018 5:05 AM IST (Updated: 29 Sept 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

காசநோய் குணமாகும் முன் 6 சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பிய விவகாரத்தில் நர்சு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை, 

காசநோய் குணமாகும் முன் 6 சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பிய விவகாரத்தில் நர்சு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 3 ஊழியர்களை பணி இடமாற்றம் செய்து மாநகராட்சி உதவி கமிஷனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஆர்ப்பாட்டம்

மும்பை சிவ்ரியில் காசநோய்க்கான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளை கொடுமைப்படுத்தி வருவதாகவும், நோய் குணமாகும் முன்பே வீட்டிற்கு அனுப்பி விடுவதாகவும் கூறி சம்பவத்தன்று மாகிம் தர்கா அருகே பொதுமக்கள் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் விளைவாக மாநகராட்சி உதவி கமிஷனர் குந்தன் நேற்று முன்தினம் சிவ்ரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணி இடைநீக்கம்

இதில், காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 6 சிறுமிகளை நோய் குணமாகும் முன்பே ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பியதும், மற்ற நோயாளிகளை சரிவர கவனிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உதவி கமிஷனர், இதற்கு காரணமாக இருந்த நர்சை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 3 பேரை பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் நோய் குணமாகும் முன்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 6 சிறுமிகளை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை தலைமை டீன் லலித் ஆனந்தேவிடம் தெரிவித்தார்.

Next Story