மண்ணச்சநல்லூர் பகுதியில் பெருவளை வாய்க்கால் தண்ணீர் வயல்வெளியில் புகுந்தது
மண்ணச்சநல்லூர் பகுதியில் பெருவளைவாய்க்கால் தண்ணீர் வயல்வெளியில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் வயல்களில் பயிரிட முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
சமயபுரம்,
முக்கொம்பு வாத்தலையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் மூலம் பாச்சூர், கோவத்தக்குடி, உளுந்தங்குடி வழியாக செல்கிறது. கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் உடைந்து சரிசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது, பெருவளை வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி மக்கள் கரும்பு, வாழை, நெல் போன்ற பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்வது வழக்கம். கோவத்தக்குடி, உளுந்தங்குடி, மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பெருவளை வாய்க்காலின் தண்ணீர் வயல் வெளிகளில் புகுந்ததால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நெல், வாழை போன்ற பயிர்கள் பயிரிட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும் கரும்பு பயிரிடப்பட்ட பகுதியில் தண்ணீர் புகுந்ததால் அவை அழுகும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இது பற்றி உளுந்தங்குடியை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் கூறியதாவது:-
வாத்தலையிலிருந்து பெருவளை வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டுதான் அழகியமணவாளம், பாச்சூர், கோவத்தக்குடி, உளுந்தங்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களை பலநூறு ஏக்கர் பரப்பளவில் நடவு செய்து விவசாயம் செய்து வந்தோம். பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்காலை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தூர் வாராததாலும், கரைகளை பலப்படுத்தாததாலும் தற்பொழுது வரும் அதிகளவு தண்ணீர் வயல்பகுதிக்குள் புகுந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மேலும் இந்த வாய்க்காலின் குறிப்பிட்ட பகுதியில் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறும் சூழ்நிலையில் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் மிகுந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும். கரைகளை பலப்படுத்தாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இது போன்று ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story