தூத்துக்குடி கல்லூரியில் பழந்தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் பாரம்பரிய திருவிழா 4-ந் தேதி தொடங்குகிறது
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் சத்தியபாமா வ.உ.சி. கல்லூரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் சத்தியபாமா வ.உ.சி. கல்லூரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பாரம்பரிய திருவிழா வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பழந்தமிழர்களின் பண்பாட்டை அறிமுகப்படுத்தவும், அதனை இன்றைய நாகரிக வளர்ச்சியால், மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் அன்றைய வாழ்வும், அறிவியலும் என்ற தலைப்பில் பாரம்பரிய திருவிழா நடக்கிறது.
விழாவில் பழந்தமிழர் கலைகளான பரதநாட்டியம், கரகம், கோலாட்டம், கும்மி, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலைகள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. மாட்டு வண்டியில் சவாரி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய இனிப்பு வகைகள், விளையாட்டுகளும் நடத்தப்படுகிறது. பண்பாட்டு அடையாளங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நாணயங்கள், ஓலைச்சுவடி, மண்பாண்டங்கள் கண்காட்சி நடக்கிறது. இந்த திருவிழாவில் பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்பதற்கு குழந்தைகளுக்கு ரூ.5-ம், பெண்களுக்கு ரூ.10-ம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு உடன் இருந்தார்.
Related Tags :
Next Story