போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.1.38 கோடி கடன்பெற்று மோசடி 5 பேர் கைது


போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.1.38 கோடி கடன்பெற்று மோசடி 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2018 5:10 AM IST (Updated: 30 Sept 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் கடன்பெற்று மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் கடன்பெற்று மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டுக்கடன்

மும்பை ஓசிவார பகுதியில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் பாரத வங்கியில் கவுசிக் குமார் நாத்(வயது 59) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி செய்தது சமீபத்தில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் கவுசிக் குமார் நாத்தை கைது செய்தனர்.

பிடிபட்ட கவுசிக் குமார் நாத் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியன் வங்கியில் வீட்டுக்கடனாக ரூ.59 லட்சமும், வாகன கடன்களாக ரூ.50 லட்சமும் வாங்கியுள்ளார். இதேபோல் பாரத வங்கியில் ரூ.29 லட்சம் வாகன கடன் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

போலீஸ் காவல்

மேலும் முக்கிய குற்றவாளியான இவருக்கு உடந்தையாக இருந்த வாகன விற்பனை நிறுவன உரிமையாளர், வாகன விற்பனை பிரதிநிதிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 3-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கவுசிக் குமார் நாத் கொல்கத்தாவிலும் இதேபோன்ற வங்கி மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Next Story