தமிழக அரசை கண்டித்து க.பரமத்தியில் அ.ம.மு.க.த்தினர் இன்று உண்ணாவிரதம்
தமிழக அரசை கண்டித்து க.பரமத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
க.பரமத்தி,
க.பரமத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அஞ்சூர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.லோகநாதன் வரவேற்றார். க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மீன்குஞ்சு ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும், கட்சியின்அமைப்பு செயலாளருமான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் 18 எம்.எல்.ஏ.க் களின் தீர்ப்பு வந்து விடும். தீபாவளிக்கு பிறகு நாங்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவோம். நாளை (அதாவது இன்று) ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசை கண்டித்து க.பரமத்தி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,000 பேருக்கும் மேல் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆரியூர் சுப்ரமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பவுத்திரம் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் திருமங்கலம் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பிரவின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story