மணல் கடத்திய சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்; 2 பேர் கைது


மணல் கடத்திய சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2018 7:30 AM IST (Updated: 30 Sept 2018 7:30 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே மணல் கடத்திய சரக்கு ஆட்டோக்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்தி வந்த அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் விஜய் (வயது 23), சங்கர் மகன் விக்னேஷ் (16) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story