ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக சென்ற தண்ணீர்


ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக சென்ற தண்ணீர்
x
தினத்தந்தி 30 Sept 2018 10:04 AM IST (Updated: 30 Sept 2018 10:04 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் கெலவரப்பள்ளி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,102 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,342 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 42.31 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 1,342 கனஅடி தண்ணீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த தண்ணீர் நுங்கும், நுரையுமாக காணப்படுகிறது.

இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இது போன்று அடிக்கடி தண்ணீர் நுங்கும், நுரையுமாக வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story