பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு பிரச்சினை: முதல்–அமைச்சரிடம், மாணவர்கள் மனு


பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு பிரச்சினை: முதல்–அமைச்சரிடம், மாணவர்கள் மனு
x
தினத்தந்தி 30 Sept 2018 7:56 PM IST (Updated: 30 Sept 2018 7:56 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பல்கலைக்கழக மாணவ–மாணவிகள் மனு அளித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை, பல்கலைக்கழக மாணவ–மாணவிகள் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மொத்தம் 90 பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் 20 பாடப்பிரிவுகளில் மட்டுமே உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இனி வருங்காலங்களில் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இல்லை என துணைவேந்தர் குர்மீத்சிங் தெரிவித்துள்ளார். இதனால் புதுவை மாநிலத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பாதிக்கப்படும். எனவே இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story