மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? நெல்லை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? நெல்லை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2018 3:00 AM IST (Updated: 1 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா? என நெல்லை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தெரிவித்தார்.

நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா? என நெல்லை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தடை உத்தரவு

செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தால் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது. மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையானது இன்றுடன் (அதாவது நேற்று) முடிவடைந்தது.

குண்டர் சட்டம்

செங்கோட்டையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்்ந்துள்ளது. மேலும் செங்கோட்டையில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் இருதரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, சமாதான ஊர்வலம் நடத்துவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டமா?

கேரள மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா? என தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 15 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் வனத்துறையின் உதவியுடன் மாதத்துக்கு 3 முறை சோதனையிலும் ஈடுபடுவர். இந்த சோதனையின் போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கொண்டு செல்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story