நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: நாங்குநேரியில் 33 மி.மீ. பதிவு


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: நாங்குநேரியில் 33 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 30 Sep 2018 10:00 PM GMT (Updated: 30 Sep 2018 7:39 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் 33 மி.மீ. மழை பதிவானது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் 33 மி.மீ. மழை பதிவானது.

பரவலான மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை செய்து வருகிறது. ஒரு சில ஊர்களில் சாரல் மழை பெய்து வருகிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பான பகுதியில் மழை இல்லை. அதனால் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைப்பகுதிக்கு தண்ணீர் வரத்து இல்லை. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான ஊர்களில் மழை பெய்தது.

அம்பை, ஆயக்குடி, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களில் சற்று கனமழை பெய்தது. அதிக பட்சமாக நாங்குநேரியில் 33 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

அணைகளில் நீர்மட்டம்

பாபநாசம் அணையின் கொள்ளளவு 143 அடி ஆகும். தற்போது 104.95 அடி கொள்ளளவு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் கொள்ளளவு 156 அடி ஆகும். தற்போது மராமத்து பணி நடைபெற்று வருவதால் அணையில் 19.68 அடி தண்ணீர் மட்டுமே தேக்கப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு அணையின் கொள்ளளவு 118 அடி ஆகும். தற்போது அணையில் 84.40 அடி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு குறைந்தளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு வருமாறு (மி.மீட்டர்):- சேர்வலாறு- 9, கடனாநதி- 14, ராமநதி- 12, கருப்பநதி- 4, குண்டாறு- 22, அடவிநயினாறு- 3, அம்பை- 23, ஆய்க்குடி- 17.6, சேரன்மாதேவி- 4, நாங்குநேரி- 33, பாளையங்கோட்டை- 7.2, சங்கரன்கோவில்- 2, செங்கோட்டை- 27, தென்காசி- 22, நெல்லை- 4.2.

Next Story