புனேயில் கடைக்காரரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளை போலீஸ் சீருடையில் வந்த கும்பலுக்கு வலைவீச்சு

புனேயில் போலீஸ் சீருடையில் வந்து கடைக்காரரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
புனே,
புனேயில் போலீஸ் சீருடையில் வந்து கடைக்காரரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
கடைக்காரர்
புனே ஹடப்சர் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஷிண்டே (வயது 26). இவர் வாட்கி பகுதியில் கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை அடைத்துவிட்டு, வசூலான ரூ.1 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
புருசுங்கி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த 4 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீஸ் சீருடை அணிந்து இருந்தனர்.
பணம் கொள்ளை
திடீரென அந்த கும்பலினர் விஜய் ஷிண்டேவை தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் விஜய் ஷிண்டே படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






