அழைப்பு உங்களுக்குத்தான்!


அழைப்பு உங்களுக்குத்தான்!
x
தினத்தந்தி 1 Oct 2018 11:31 AM IST (Updated: 1 Oct 2018 11:31 AM IST)
t-max-icont-min-icon

.

யூ.பி.எஸ்.சி.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள நிர்வாக அதிகாரி, விரிவுரையாளர் போன்ற பணிகளுக்கு 13 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், கெமிக்கல், சிவில் மற்றும் ஐ.டி. போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்குப் பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 12-10-2018-ந் தேதியாகும்.

ஆயுர்வேத மையம்

தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் ஜெய்ப்பூரில் செயல்படுகிறது. தற்போது இந்த மையத்தில் ஸ்டாப் நர்ஸ், லோயர் டிவிஷன் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற பணிகளுக்கு 48 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பார்மசி படித்தவர்கள், 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வேறுவேறு கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31-10-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.nia.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

நிலக்கரி நிறுவனம்

பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான நார்தன் கோல் பீல்டு நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள், ரேடியோகிராபி, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு 8-10-2018-ந் தேதி தொடங்குகிறது. 12-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://nclcil.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம் கழக நிறுவனம் சுருக்கமாக பி.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.bharatpetroleum.com/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 14-10-2018-ந் தேதியாகும்.

ஐ.ஐ.டி.

இந்திய தொழில்நுட்ப மையமான ஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சி.எஸ்.இ. போன்ற பிரிவில் எம்.இ., எம்.டெக் படித்தவர்களுக்கு பணி உள்ளது. சில பணிகளுக்கு பி.எஸ்சி., பி.சி.ஏ, பி.டெக். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.iitdh.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 5-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கொங்கன் ரெயில்வே

மத்திய ரெயில்வே துறையில் மற்ற மண்டலங்களுக்கு உட்படாத ரெயில்வே பிரிவாக செயல்படுவது கொங்கன் ரெயில்வே. தற்போது இந்த ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிக்கு 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-1-2019 தேதியில் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இ.சி.இ., ஐ.டி. இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://konkanrailway.com/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 18-10-2018-ந் தேதி ஆகும்.
1 More update

Next Story