வாணியம்பாடி அருகே குடிபோதையில் தச்சு தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை


வாணியம்பாடி அருகே குடிபோதையில் தச்சு தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை
x

வாணியம்பாடி அருகே குடிபோதையில் தச்சு தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ‘வாட்ஸ் அப்’பில் வெளியான வீடியோவால் அவர்கள் பிடிபட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மவீன் (வயது 28), பெங்களூருவில் தச்சு வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சம்மந்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் நண்பர்கள் சுதர்சன், பவித், ராகுல், கல்யாண்குமார், அருண்குமார், அஜித்குமார் ஆகியோருடன் மவீன் மது அருந்தினார்.

அப்போது மதுபோதையில் மவீனை நண்பர்கள் அருகில் உள்ள கிணற்றில் தள்ளினர். இதில் நீரில் மூழ்கி மவீன் பரிதாபமாக இறந்தார். இதனால் பயந்து போன நண்பர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

இதனிடையே மவீனின் தந்தை மகேந்திரன், தனது மகன் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் மவீன் நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் சரிவர தகவல் சொல்லவில்லை. இதனால் அவர் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் மவீனை நண்பர்கள் கிணற்றில் தள்ளும் காட்சி பதிவாகி அது ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா போலீசார் அந்த வீடியோவில் இருந்த அஜித்குமார், அருண்குமார், சுதர்சன், பவித் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story