வாழக்கோம்பையில் பாலம் கட்டக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வாழக்கோம்பையில் பாலம் கட்டக்கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கெங்கவல்லி அருகே உள்ள ஜங்கம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்கரடு பகுதியை சேர்ந்த கிராமமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி மற்றும் பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரி திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். இது குறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஜங்கமசமுத்திரம்-வாழக்கோம்பை புலிக்கரடு ரோட்டின் குறுக்கே வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றை தாண்டி தான் தம்மம்பட்டி செல்ல வேண்டும். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது, கடந்து செல்ல முடியாது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே இந்த ஆற்றின் குறுக்கே வாழக்கோம்பையில் பாலம் கட்டித்தரக்கோரி கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பாலம் கட்டித்தர வேண்டும். சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் பெட்ரோல், டீசல் வாங்க பொதுமக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோரிக்கை அட்டையை கையில் ஏந்தியபடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பெத்தநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கல்வராயன் மலை கரிய கோவில், ஆனைமடுவில் வசிஷ்ட ஆறு உற்பத்தியாகி, ஆத்தூர், தலைவாசல் வழியாக கடலூர் வரை செல்கிறது. இந்த ஆறுதான் எங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆற்றில் மணல் அதிகம் எடுக்கப்படுகிறது. இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். அதே போன்று ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story