நினைவு தினத்தையொட்டி காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க.– காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவிப்பு
காமராஜர் நினைவுதினத்தையொட்டி அவருடைய சிலைக்கு அ.தி.மு.க.–காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்,
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் நடந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நிர்வாகிகள் ஜெயசீலன், ஜெயச்சந்திரன், சந்திரன், ஷாநவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் அலெக்ஸ், மகேஷ் லாசர், அசோக்ராஜ், காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, கே.டி.உதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் கட்சியினர் வடசேரி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பா.ம.க. சார்பில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் கில்மன்புரூஸ், மாநில துணைத்தலைவர் ஐசியஸ் மிசா, மாவட்ட செயலாளர் ஜார்ஜ் கர்ணன், அலெக்சாண்டர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ஜெயசிங் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், நிர்வாகிகள் பெல்வின், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை அலுவலகத்தில் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் கதிரேசன், மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் ஆகாஷ்தேவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாவட்ட தலைவர் அருணாச்சலம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஜார்ஜ் பிலீஜின், சாகுல்ஹமீது, திலீப்சிங், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ரெஜிசிங் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரசேகர பாண்டியன், ஜஸ்டஸ், விஷ்ணுகுமார், பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story