தூத்துக்குடி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திய வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருட்டு
தூத்துக்குடி அருகே வேப்பலோடை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவசக்தி. விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கயிற்றில் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வழியாக காரில் வந்த மர்மநபர், 2 ஆடுகளை திருடி, காரில் கடத்தி சென்றார். அப்போது மழை பெய்ததால், தெருவில் தேங்கி கிடந்த சகதியில் காரின் டயர் பதிந்து சிக்கி கொண்டது.
அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காரில் இருந்தவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் காரில் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனே அவரை பொதுமக்கள் பிடித்து வைத்து, தருவைக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில் அவர், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்த செல்வின் ஜெயபால் மகன் ரிச்சர்டு கிஷோர் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேல் விசாரணையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பலோடையில் 4 ஆடுகளை திருடி, அவற்றை எட்டயபுரம் வாரச்சந்தையில் விற்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். கைதான கிஷோரை போலீசார் விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி சப்–ஜெயிலில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






