காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராமசபை கூட்டம்


காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2018 3:45 AM IST (Updated: 3 Oct 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி கிராம ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், அக்டோபர் 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கத்தினை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராமசபை கூட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற பிரச்சினைகளை களைவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடையே கலந் துரையாடினார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்துகொண்டு கூட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, காசநோய் விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுதல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஊராட்சியின் 2018-19-ம் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு ஆகியவை கிராம சபைக்கு முன் சமர்பிக்கப் பட்டது.

இதில் கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கும், கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், தனிநபர் இல்ல கழிவறைகளை தங்களது இல்லங்களில் அமைத்து, அதனை சிறப்பாக பயன் படுத்தி வரும் மூன்றுபேருக்கு காசோலைகளையும், சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி யாளர்களுக்கு சான்றிதழ் களையும் கலெக்டர் வழங்கினார்.


இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சுரேஷ், ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story