விருதுநகர்–சிவகாசி ரோட்டில் சாலை சீரமைப்பு பணி முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்; நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை


விருதுநகர்–சிவகாசி ரோட்டில் சாலை சீரமைப்பு பணி முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்; நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2018 3:00 AM IST (Updated: 3 Oct 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்–சிவகாசி ரோட்டில் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 600 கிலோ மீட்டர் சாலைகளை 5 வருடங்களுக்கு பராமரிக்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.542 கோடிக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேவையின் அடிப்படையிலும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் நெடுஞ்சாலைத்துறையினரின் அறிவுறுத்தலின்படி இந்த தனியார் நிறுவனம் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விருதுநகர்–சிவகாசி ரோட்டில் கருமாதி மடத்தில் இருந்து புறவழிச்சாலை சந்திப்பு வரை சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் சீரமைப்பு பணி சீராக நடைபெற வில்லை என்ற பல்வேறு தரப்பினரும் புகார் கூறும் நிலை உள்ளது. சிவகாசி ரோடு ஆற்று பாலத்தில் இருந்து புறவழிச்சாலை வரை உள்ள பகுதியில் சாலை சீராக அமைக்கப்படாமல் மின் கம்பங்கள் உள்ள பகுதிகளில் சாலை அகலம் குறைவாக உள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை முறையாக சீரமைக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள சாலையின் அகலமும் சீராக இருக்கும் வகையில் உரிய சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இல்லையேல் குறைந்த காலக்கட்டத்தில் சாலை சேதம் அடைவதோடு, வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

1 More update

Next Story