ஓசூரில் காந்தி பிறந்த நாள் விழா சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை


ஓசூரில் காந்தி பிறந்த நாள் விழா சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மத்திகிரி,

ஓசூரில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி. ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஐ.என்.டி.யு.சி. தேசிய அமைப்பு செயலாளர் கே.ஏ.மனோகரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடரெட்டி, டி.வி.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி, குழு ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முரளிதரன் வரவேற்றார். முன்னதாக காந்தி சிலை அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி சிலையில் இருந்து காந்தி உருவபடத்துடன் வெள்ளிரதம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வக்கீல் மஞ்சுநாதா, தியாகராஜன், சிவப்பரெட்டி, அமைப்புசாரா பிரிவு முத்தப்பா, கார்த்திக் கவுடா, முனிராஜ், கீர்த்திகணேசன், நசீர், ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் கோபிநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூனப்பள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சீனிவாச ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

ஓசூரில் மகாத்மா காந்தி சிலை அமைப்பு குழு சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், தே.மு.தி.க. சார்பில் அதன் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பின் சார்பில், மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஓசூர் தேர்பேட்டை, பச்சைக்குளம் பகுதியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன, இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story