கிருஷ்ணகிரியில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்


கிருஷ்ணகிரியில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணிகள் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறையை சேர்ந்த கால்நடை ஆய்வாளர்கள், செயற்கை முறை கருவூட்டாளர்கள் மற்றும் இதர கணக்கெடுப்பாளர்கள் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த பணிக்காக கையடக்க கணினி, சிம்கார்டு உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழங்கி பணியை தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணியின் போது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார். 
1 More update

Next Story