ஜியோமி பிட்னெஸ் பேண்ட் 3

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சீனாவின் ஜியோமி நிறுவனத்தின் தயாரிப்புதான் பிட்னெஸ் பேண்ட் 3 ஸ்மார்ட் வாட்ச்.
‘எம் ஐ பேண்ட் 3’ என்ற பெயரில் மூன்று கண்கவர் நிறங்களில் இவை வெளி வந்துள்ளன. கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய மாடலைக் காட்டிலும் இது மேம்பட்ட ரகமாகும். அதேபோல இதன் விலையும் சற்று கூடுதலாகும். இதன் தொடு திரை ஓலெட் தொழில்நுட்பத்திலானது. இது நீர்புகா தன்மை கொண்டது. இதனால் 50 மீட்டர் ஆழம் வரை நீரில் நீந்திச் சென்றாலும் நீர் புகாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக இதன் பேட்டரி 20 நாட் கள் வரை தொடர்ந்து செயல்படும். இதில் எம்.ஐ. பேண்ட் என்.எப்.சி. மாடல் விலை ரூ.2,100. இது ஜியோமி ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கும்.
என்.எப்.சி. என்பது நியர் பீல்டு கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமாகும். இந்த ஸ்மார்ட் வாட்சுகள் ஜியோமி ஸ்மார்ட்போன் இல்லாத ஸ்மார்ட்போனிலும் இயக்க முடியும் என்பது சிறப்பாகும். இது ஆண்ட்ராய்டு 4.4-ல் செயல்படக் கூடியது. அதேபோல ஐ.ஓ.எஸ் 9.0 இயங்குதளத்தில் செயல்படும்.
இது 0.78 அங்குலம் ஓலெட் திரை கொண்டது. இதில் அழைப்பு வருகை, குறுஞ்செய்தி அறிவிப்பு, நேரம், நடந்த தூரம், இதய துடிப்பு ஆகியவற்றை அறிய முடியும். இதற்கான சென்சார் (உணர் கருவி பிபி.ஜி.) உள்ளது. தூங்கும் நேரத்தை கண்காணிப்பது ஆகியன இதில் உள்ள சிறப்பம்சமாகும். இதனை புளூடூத் இணைப்பு மூலம் செயல்படுத்த முடியும். இதன் எடை 20 கிராம் மட்டுமே.
Related Tags :
Next Story






