கோத்ரெஜ் இயான் பிரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்

வீட்டுக்குத் தேவையான மின் சாதன பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோத்ரெஜ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் இயான் பிரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்.
இது முற்றிலும் ஆட்டோமேடிக் செயல்பாடுகளைக் கொண்டது. முன்பகுதியில் துணிகளைப் போடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக ஒழிக்கும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் துணி துவைத்த பிறகு அதில் உள்ள அழுக்குகள் மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் முற்றிலுமாக நீங்கிவிடும். ஏபிடி எனப்படும் அலர்ஜி புரொடெக்ட் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் இதில் துவைக்கும் துணிகளின் தன்மை காட்டன், நைலான், பட்டு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான துவைக்கும் முறையை தேர்வு செய்ய வேண்டும். மொத்தம் 15 வகையான துணி துவைக்கும் தேர்வு முறைகள் இதில் உள்ளன.
ஒவ்வொரு துணிக்கும் அதற்குரிய துவைக்கும் முறையை முன்கூட்டியே புரோகிராம் செய்து வைத்துவிட்டால், அடுத்து துவைக்கும்போது பேன் ரெகுலேட்டரைப் போல உள்ள பொத்தானை சுழற்றி அந்தந்த துணி பிரிவுக்கு நேராக வைத்துவிட்டால் துவைத்து தந்துவிடும். துணியில் கூடுதலாக கறை உள்ளது என்று கருதும்பட்டத்தில் நேரத்தை, துவைக்கும் அளவை மாற்றிக் கொள்ளலாம். துணியை எத்தனை முறை அலச வேண்டும், கூடுதலாக அலச வேண்டுமா என்பதையும் புரோகிராம் செய்யலாம். மோட்டார் சுழற்சி வேகத்தையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.
அலர்ஜி ஏற்படுத்தும் 7 காரணிகளாக பூக்களின் மகரந்த தூள்கள், தூசி பூச்சிகள், வீட்டு தூசிகள், நாய் ஒவ்வாமை, பூனை ஒவ்வாமை, பூஞ்ஜைகள் மற்றும் மூச்சுக் காற்று ஒவ்வாமை ஆகியன இருக்கின்றன. ஆடைகளில் படிந்துள்ள இந்த ஒவ்வாமை காரணிகளை கோத்ரெஜ் சலவை இயந்திரம் நீக்கிவிடுகிறது. மேலும் நோய்க்குக் காரணமான நான்கு வகையான பாக்டீரியாக்களையும் இது நீக்கி விடுகிறது. இந்த தொழில்நுட்பத்துக்கு பிரிட்டிஷ் ஒவ்வாமை அமைப்பான அலர்ஜி யுகே சான்றிதழ் அளித்துள்ளது.
எளிதாக சலவை செய்ய 15 நிமிடங்களில் துணியைத் துவைத்து காயவைத்து தரும். அழுக்கு குறைவான துணிகளை சீக்கிரம் துவைத்து தந்துவிடுகிறது. கறைகளின் தன்மைக்கேற்ப 5 வகையான தேர்வு நிலைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
எல்.சி.டி. பேனல் மிக கவர்ச்சிகரமானதாகவும், எளிதில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.34,500-ல் தொடங்கி ரூ.77 ஆயிரம் வரை உள்ளது. இதன் மோட்டாருக்கு 10 ஆண்டு உத்தரவாதத்தையும் கோத்ரெஜ் அளிக்கிறது.
Related Tags :
Next Story






