பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை பொது மேலாளர் தகவல்


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 3:00 AM IST (Updated: 3 Oct 2018 5:19 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட பி.எஸ்.என்எல். பொது மேலாளர் ப.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட பி.எஸ்.என்எல். பொது மேலாளர் ப.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வாடிக்கையாளார்களுக்கு சலுகை

பி.எஸ்.என்.எல். அமைப்பு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக புதிய சிறப்பு கட்டண வவுச்சர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. எஸ்.டி.வி. கோம்போ 18 என்ற பூஸ்டர் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்களை நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. தினசரி 1.8 ஜிபி. உயர் டேட்டாவும், அதற்கு பின்னர் 80 கேபிபிஎஸ் வேகத்திலும் வழங்குகிறது.

இந்த வவுச்சரை வாடிக்கையாளர்கள் செல்ப் கேர் போர்ட்ல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக ஆக்டிவேட் செய்ய STV COMBO18 என்று டைப் செய்து 123 –க்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். மேலும் எஸ்.டி.வி. 8 ஆக செயல்பட்ட ஐ.எஸ்.டி. பூஸ்டர் எஸ்.டி.வி ஐ.எஸ்.டி 22 ஆக மாற்றப்பட்டு உள்ளது.

15 ஜிபி வரை...

எஸ்.டி.வி. 601 என்ற பூஸ்டர் ஆக்டிவேட் செய்தால் 5 ஜிபி. டேட்டாவும், ரூ.709 டாக்டைமும் கிடைக்கும். இதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி. எஸ்.டி.வி. 1201 என்ற பூஸ்டர் ஆக்டிவேட் செய்தால் 10 ஜிபி. டேட்டாவும் ரூ.1,417 டாக்டைமும் கிடைக்கும். இதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி.

எஸ்.டி.வி. 1801 என்ற பூஸ்டர் ஆக்டிவேட் செய்தால் 15 ஜிபி. டேட்டாவும் ரூ.2,125 டாக்டைமும் கிடைக்கும். இதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி. இந்த பூஸ்டர்களின் டாக்டைம் மூலமாக வாய்ஸ் கால்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா மட்டுமே பயன்படுத்தலாம்.

பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30–க்கு பேப்பர் வவுச்சர் மூலம் செய்யப்படும் டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. இந்த சலுகை வருகிற 11–ந் தேதி வரை மட்டுமே. சி டாப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப் அப்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

புதிதாக அறிமுகம்

பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை அம்பை கோட்டத்தின் கீழ் ஆம்பூர், நெல்லை கோட்டத்தில் பர்கிட் மாநகரம், மேல தாழையூத்து மற்றும் வள்ளியூர் கோட்டத்தில் உவரி, இடையன்குடி பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story