தஞ்சை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
தஞ்சை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மதுபாட்டில்களை சரக்கு ஆட்டோவில் எடுத்துச்சென்றபோது போலீசார் வந்ததால் ஆட்டோவை விட்டு விட்டு 2 பேர் தப்பியோடி விட்டனர்.
தஞ்சாவூர்,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டு இருந்தது. அன்று இரவு தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இடையிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையடித்த மதுபானங்களை சரக்கு ஆட்டோவில் மர்ம நபர்கள் எடுத்துச் செல்வதை பார்த்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன் பேரில் போலீசார் தஞ்சை மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளார் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த காவலாளி, தங்களது ஓட்டல் வளாகத்தில் ஒரு சரக்கு ஆட்டோ நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இதில் உள்ள 2 பேர் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அந்த சரக்கு ஆட்டோவில் இருந்து மது அருந்திகொண்டிருந்த 2 பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர். போலீசார், அந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். இதில் பாபநாசம் அருகே இடையிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த வண்டி தஞ்சை விளார்சாலை அன்பு நகர் 1–வது தெருவைச் சேர்ந்த வீரசெல்வம் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.
அந்த வண்டியை மர்ம நபர்கள் திருடிச்சென்று மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை எடுத்துச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story