அமைச்சரை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

டாக்டர் அன்புமணி ராமதாசை விமர்சித்ததாக கூறி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்,
பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாசை விமர்சித்ததாக கூறி அமைச்சர் கே.பி.அன்பழகனை கண்டித்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட கருப்பு கொடி ஏந்தி பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் நிலவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலமாக சென்ற பா.ம.க.வினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரியூரில் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் கணபதி, இளைஞர் சங்க செயலாளர் முத்து, சட்டநாதன், இளையமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் அன்பழகனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி துணை தலைவர் ஆனந்தன், பொன்.பாலாஜி, ராவணன், செங்கோடன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கடத்தூரில் .அமைச்சர் அன்பழகனை கண்டித்து உழவர் பேரியக்கம் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அரசாங்கம், மாவட்ட செயலாளர் இமயவர்மன், முன்னாள் மாவட்ட செயலாளர் மதியழகன், பசுமை தாயக மாவட்ட செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






