டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் அரசு கொடுக்கும் மானிய விலை டீசலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசு கொடுக்கும் மானிய விலை டீசல் போதுமான அளவுக்கு கிடைக்காததால் தனியார் டீசல் பாங்குகளில் அதிக விலைக் கொடுத்து டீசல் வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிப்பதால் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி கடலுக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அப்படியும் டீசலை வாங்கி கடலுக்கு சென்றால் போதுமான அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க கோரியும், மானிய டீசலை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story