காச்சா மூச்சா வலை பிரச்சினை: கடல் வழியாக மேலமணக்குடிக்கு திரண்டு வந்த முட்டம் மீனவர்கள்
காச்சா மூச்சா வலை பிரச்சினையால் கடல் வழியாக மேலமணக்குடிக்கு திரண்டு வந்த முட்டம் மீனவர்களால் மோதல் அபாயம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்,
குமரி மாவட்டத்தில் விசைப்படகு, வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு மீன்வளத்துறை சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளில் ஒன்றுதான், மூன்றடுக்கு கொண்ட காச்சா மூச்சா செவுள் வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது. மாறாக கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் சென்று இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை கூறியுள்ளது.
ஆனால் மேல மணக்குடி மீனவர்கள் விதிகளை மீறி புத்தன்துறை கடற்கரை பகுதியில் மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புத்தன்துறை மீனவர்களுக்கும், மேல மணக்குடி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேலமணக்குடி மீனவர்களது வலைகளை புத்தன்துறை மீனவர்கள் பறித்தனர். இதற்கு பதிலாக அவர்கள் 3 வள்ளங்களை சிறைபிடித்து மேல மணக்குடிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக 2 கிராம பங்கு தந்தைகள் பேசி முடிவு செய்தனர்.
அதன் பிறகு வலைகள் மற்றும் வள்ளங்களை மீனவர்கள் திரும்ப ஒப்படைத்தனர். காச்சாமூச்சா வலையை பயன்படுத்துவதற்கு முட்டம் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் முட்டம் மீனவர்கள் 15-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் மேல மணக்குடி கடல் பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கிருந்து கிராம மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவர்கள் சிலர், மேல மணக்குடி புனித அந்திரேயா ஆலய மணியை ஒலிக்கச் செய்தனர்.
ஆலய மணி சத்தம் கேட்டு மேல மணக்குடி கிராம மக்கள் ஆலயம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதோடு மட்டும் அல்லாது மோதல் ஏற்படும் சூழலும் உருவானது.
பதற்றமான சூழ்நிலையை அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், செல்வம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் மேல மணக்குடி விரைந்து வந்தனர். போலீஸ் குவிக்கப்பட்டதும், முட்டம் மீனவர்கள் தாங்கள் வந்த வள்ளங்களில் திரும்பி சென்றனர்.
இதையடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் வீராச்சாமி, தாசில்தார் அணில்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் மேலமணக்குடிக்கு விரைந்து வந்தனர். அங்கு மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாலையில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என்று கூறி மீனவர்களுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வருவாய்த்துறை ஊழியர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயகுமார், தாசில்தார்கள் அணில்குமார், சுஜித், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்ததை நடத்தினர். மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.
அதைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் மூன்றடுக்கு வலையை பயன்படுத்த வேண்டும், மூன்றடுக்கு வலை பாதிப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கப்பட வேண்டும், மூன்றடுக்கு வலையை பயன்படுத்தி யாரேனும் மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அல்லது அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மீனவர்கள் சண்டையிட கூடாது என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்த தீர்மானங்களுக்கு மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் மீன்வளத்துறை விதிகளின் படியே மீன்பிடிப்பதாகவும் கூறினர்.

Related Tags :
Next Story