ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற உல்லாஸ்நகர் மாநகராட்சி அதிகாரி பிடிபட்டார்
தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது கடையில் கட்டுமான பணி மேற்கொள்வதற்காக உல்லாஸ்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
அம்பர்நாத்,
விண்ணப்பம் தொடர்பாக அனுமதி அளிக்க அதிகாரி நந்தலால் வியாபாரியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனால் வியாபாரி பணம் தருவதாக கூறி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story