மைசூரு அரண்மனையில் இளவரசர் தர்பார் நடத்த தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி
மைசூரு அரண்மனையில் இளவரசர் தர்பார் நடத்த தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
மைசூரு,
வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா வருகிற 10-ந்தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோலாகலமாக தொடங்குகிறது. இதனை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதாமூர்த்தி தொடங்கிவைக்கிறார். இதைதொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வருகிற 19-ந்தேதி வரை தசரா விழா நடக்கிறது.
விழாவையொட்டி தசரா தொடக்க நாளில் இருந்து முடியும் வரையிலான 10 நாட்களும் அரண்மனை வளாகத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தர்பார் நடத்துவார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். இது பழங்காலம் முதல் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தங்க சிம்மாசனம் வைரம், முத்து, ரத்தினம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றால் ஆனது. அத்துடன் யானை தந்தங்களும் அந்த சிம்மாசனத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த தங்க சிம்மாசனம் 8 பாகங்களாக உள்ளன. இவை அரண்மனையில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி தசரா விழா தொடங்குவதால், மன்னர் தர்பார் நடத்த ஏதுவாக தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அதாவது அரண்மனையின் தர்பார் மண்டபத்தில் இந்த தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட உள்ளது.
முன்னதாக பாதுகாப்பு அறையில் இருந்து தங்க சிம்மாசனத்தின் பாகங்கள் சிறப்பு பூஜை நடத்தி தர்பார் மண்டபத்திற்கு எடுத்துவரப்படுகிறது. பின்னர் தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி நடக்கிறது.
இந்த பணியில் மைசூரு அருகே கெஜ்ஜஹள்ளி கிராமத்தை சேர்ந்த 6 பேர் குழுவினர் ஈடுபடுகிறார்கள். தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்ட பிறகு, வெள்ளை துணியால் மூடி வைக்கப்படும். தசரா விழா தொடக்க நாள் வெள்ளை துணி நீ்க்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும்.
அதன் பிறகு அந்த தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து தர்பார் நடத்துவார். இந்த தர்பார் 19-ந்தேதி வரை தினமும் நடக்கும். தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி நடைபெறுவதையொட்டி அரண்மனைக்குள் இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யதுவீர் மைசூரு அரண்மனை இளவரசராக பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறும் 2-வது தசரா விழா என்பதும், அவர் 2-வது முறையாக தர்பார் நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story