வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை- ரூ.3½ லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை


வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை- ரூ.3½ லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2018 3:45 AM IST (Updated: 5 Oct 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராமர்மடம் தாதன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர், குடும்பத்துடன் பூந்தோட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு படுக்கை அறை மெத்தையின் அடியில் வைத்திருந்த 16 பவுன் நகைகள், ரூ.3½ லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story