பண்டிகை காலங்களில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை திருச்சி கோட்ட பொதுமேலாளர் பேட்டி.
தாமரைக்குளம்,
அரியலூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி, குடிநீர் வினியோகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உள்ளதா என்று திருச்சி கோட்ட ரெயில்வே பொது மேலாளர் உதய்குமார் ரெட்டி ஆய்வு செய்தார். மேலும் வி.ஐ.பி.க்கள் ரெயில் நிலையத்திற்கு வந்தால் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் கட்டிடம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, ரெயில் நிலையத்தின் வெளியே தண்ணீர் தேங்கி நிற்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும், அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி கோட்டத்தில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அரியலூர், பெரம்பலூர் சாலையில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும். அரியலூர் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு விரைவு ரெயில்கள் நின்று செல்ல ரூ.2 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். ரெயில் நிலையத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை, இதனால் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் ரெயில்வே மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். ஆய்வின்போது அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story