ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-05T01:39:25+05:30)

அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத சம்பள நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் முடங்கியுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சிலர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் நவம்பர் மாதம் 27-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.


Next Story