கன்னியாகுமரி- நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. அதுவும் கன்னியாகுமரியில் 2 மணி நேரமும், நாகர்கோவிலில் 1¼ மணி நேரமும் இடைவிடாமல் பெய்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொட்டாரம் பகுதியில் 8 மி.மீ. மழையும், மயிலாடி பகுதியில் 11.2 மி.மீ. மழையும், குளச்சல் பகுதியில் 4 மி.மீ. மழையும், மாம்பழத்துறையாறு 1 மி.மீ. மழையும் பெய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நேற்று காலையில் குமரி மாவட்டத்தில் வெயில் அடித்தது. நாகர்கோவிலில் நேற்று மதியம் 12.35 மணி அளவில் திடீரென்று வானம் கருமேகத்தால் சூழ்ந்தது. சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையின் வேகம் நேரம் செல்லச்செல்ல அதிகரித்தது. 1.50 மணி வரை சுமார் 1¼ மணி நேரம் பெய்த இந்த மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நாகர்கோவில் நகரின் சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நாகர்கோவில் கேப் ரோடு, செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் ரோடு, பறக்கை ரோடு, கே.பி.ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, கோர்ட்டு ரோடு, வடசேரி ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு போன்ற அனைத்து சாலைகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் மழை வெள்ளத்தோடு கழிவுநீரும் கலந்து ஓடியது.
நாகர்கோவில் நகரின் தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. மழை ஓய்ந்தபிறகு அப்பகுதிகளில் வெள்ளம் வடிந்தோடியது.
இதேபோல் கன்னியாகுமரியில் நேற்று மதியம் 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை 2 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் கன்னியாகுமரி சாலைகளிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் தென்தாமரைக்குளம் பகுதியில் மிதமான மழை பெய்தது. கருங்கல், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Related Tags :
Next Story