குடிபோதையில் சிறுவனை கடத்த முயன்ற பெண் கைது


குடிபோதையில் சிறுவனை கடத்த முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 5 Oct 2018 3:48 AM IST (Updated: 5 Oct 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

போரிவிலி லிங் ரோடு பகுதியில் ராம் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

மும்பை,

குடியிருப்பு வளாகத்தில் 5 வயது சிறுவன் சம்பவத்தன்று இரவு  விளையாடி கொண்டு இருந்தான்.  அப்போது அங்கு வந்த 37 வயது பெண் ஒருவர் சிறுவனை சட்டையை பிடித்து இழுத்து கடத்தி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் உதவி கேட்டு அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த கட்டிட காவலாளி அந்த பெண்ணை பிடித்து, சிறுவனை மீட்டார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து அவர் அதிகளவு மது குடித்து உள்ளார். பின்னர் குடிபோதையில் இருந்த அவர் சிறுவனை கடத்த முயன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பெண் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story