கொள்ளையனை விரட்டி சென்று துப்பாக்கி முனையில் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்


கொள்ளையனை விரட்டி சென்று துப்பாக்கி முனையில் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:34 PM GMT (Updated: 2018-10-05T04:04:33+05:30)

மதுரை ரெயில் நிலையத்தில், பயணியிடம் இருந்த பையை பறித்துக்கொண்டு ஓடிய கொள்ளையனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விரட்டி சென்று துப்பாக்கி முனையில் பிடித்தார்.

மதுரை, 


நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இரவு 7.30 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த கோபி மனைவி லட்சுமி (வயது25) என்பவர் பயணம் செய்தார். ரெயில் நள்ளிரவு 2 மணிக்கு மதுரைக்கு வந்தது.

அங்கு ரெயில் நின்றிருந்தபோது லட்சுமி வைத்திருந்த பையை ஒரு கொள்ளையன் பறித்து கொண்டு நடைமேடையில் ஓடினான். இதனால் லட்சுமி திருடன், திருடன் என்று கத்தினார். இதைத்தொடர்ந்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்த், அந்த கொள்ளையனை விரட்டி சென்றார். ஒருகட்டத்தில் துப்பாக்கி முனையில் அந்த கொள்ளையனை அவர் மடக்கி பிடித்தார்.

பின்னர் மதுரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்டவர் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கரபாண்டி (45) என்பதும், ஏற்கனவே அவர் கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருப்பதாகவும், செலவுக்கு பணம் இல்லாததால் ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் கைவரிசை காட்டியதாகவும் கூறியுள்ளார். சங்கரபாண்டியிடம் கம்மல், மூக்குத்தி போன்ற நகைகளும் இருந்தன. இதுவும் கொள்ளையடித்த பொருட்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் மதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story