சங்கரன்கோவிலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
சங்கரன்கோவிலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
பெண்நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 2–ம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவருடைய மகள் பாரதி (24). இவர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாரதி, கணேசன் வீட்டிற்கு வந்திருந்தார். இரவு பாரதி தனது பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார். பின்னர் அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பாரதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து செல்ல முயன்றார்.
நகை பறிப்புஇதில் திடீரென கண்விழித்த பாரதி சங்கிலியை கையால் இறுக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதில் சங்கிலி 2 துண்டாகி பாதி சங்கிலி மர்ம நபரிடமும், பாதி சங்கிலி பாரதியின் கையிலும் இருந்தது. பாரதியின் சத்தம் கேட்டு கணேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர் தன் கையில் கிடைத்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். அவரை அங்கும் இங்கும் தேடி வார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.