பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை பொது மேலாளர் தகவல்


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 2018-10-05T19:19:02+05:30)

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முழு டாக்டைம் 

பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.160–க்கு செய்யப்படும் டாப் அப்களுக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு டாக்டைம் வழங்குகிறது. இந்த சலுகை சி–டாப் அப், மொபைல் வாலட் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப் அப்களுக்கும் பொருந்தும்.

பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30–க்கு பேப்பர் வவுச்சர் மூலம் செய்யப்படும் டாப்–அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. இந்த சலுகை வருகிற 11–ந் தேதி வரை மட்டுமே. இந்த சலுகை சி–டாப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்–அப்களுக்கு பொருந்தாது.

புதிதாக அறிமுகம் 

சங்கரன்கோவில் கோட்டத்தில் வீரசிகாமணி மற்றும் பாம்புகோவில் சந்தை பகுதியில் பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரக பகுதிகளில் 90 இடங்களில் பழைய 2ஜி மொபைல் கோபுரங்கள் புதிய உபகரணங்கள் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாள்களுக்கு மேம்பட்ட குரல் சேவைகள் (வாய்ஸ் கால்கள்) கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தினமும் பிராட்பேண்ட் மூலமாக 5ஜிபி அன்லிமிடெட் டேட்டா மற்றும் 24 மணி நேர அன்லிமிடெட் கால்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. பிபிஜி கோம்போ யுஎல்டி 150 ஜிபி பிளானில் (ரூ.199+ஜி.எஸ்.டி) 20 எம்.பி.பி.எஸ். வரையிலான வேகத்தில் தினசரி 5ஜிபி டேட்டாவும், அதற்கு பின்னர் 1 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தில் அன்லிமிடேட் டேட்டாவும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குளுக்கும் 24 மணி நேர அன்லிமிடெட் கால்கள் கிடைக்கும்.

அமைப்பு கட்டணம் தள்ளுபடி 

புதிய தரைவழி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு அமைப்புக் கட்டணம் முறையே ரூ.600 மற்றும் ரூ.850 முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை வருகிற 21–ந் தேதி வரை மட்டுமே. மறு இணைப்பு பெறும் பொதுமக்களுக்கு இச்சலுகை உண்டு

டுவிட்டர், பேஸ்புக் மூலமாக தரைவழி, பிராட்பேண்ட் மற்றும் எப்.டி.டீ.எச். இணைப்பை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த சலுகை வருகிற 29–ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story